தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்: எடப்பாடி பழனிசாமி
'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் உறுதி ஏற்று விட்டனர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், 31 சட்டசபை தொகுதிகளில், 12.50 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பினரும், 52 மாத கால, முதல்வர் ஸ்டாலினின் 'பெயிலியர் மாடல்' ஆட்சியில், அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர்.தி.மு.க., ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி, மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்து கொண்டிருக்கிறது.
மக்கள் நலனை தள்ளி வைத்துவிட்டு, தமிழகத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே, முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் குறியாக இருக்கின்றனர். அமைச்சர் நேரு, எனது பயணத்தை தவறாக சித்தரித்து, அவதுாறு பரப்பி இருக்கிறார்.கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்போம். சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து, ஊழல் பணத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவோம்' என்ற, முதல்வரின் எண்ணத்தை கூறும் விதமாகவே, அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.ஸ்டாலின் என்ன மடைமாற்றம் செய்தாலும், எனது எழுச்சி பயணம் தொடரும். தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும், அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்