மூதாட்டி பாலியல் வன்கொடுமை : வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது
சென்னை:வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே, சாலையோரம் 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று உடலில் காயங்களுடன் அதே பகுதியில் மயங்கிகிடந்தார்.
அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் மூதாட்டியை பரிசோதித்த போது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர்கள் வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, போலீஸார் மருத்துவமனைக்கு சென்று மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக, வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.





கருத்துக்கள்