மேலப்பாளையத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை
மேலப்பாளையம் விரிவாக்கப் பகுதியான கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளிவாசல் சார்பாக தியாகத் திருநாள் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் ஹுதா தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். மீரான் மைதீன் அன்வாரி பெருநாள் தொழுகையை நடத்தினார்.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.எ. கனி மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி ஆகியோர் பத்திரிகை நண்பர்களை சந்தித்து தியாகத் திருநாள் வாழ்த்து செய்தியை தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
“தியாகத்தின் மேன்மையைப் பறைசாற்றும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னதமான தியாக வாழ்வை நினைவுகூரும் இந்நாள், நமக்குள் தியாகச் சிந்தனையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் விதைக்கும் நன்னாளாகும். சமூகத்தின் அறியாமையை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும், ஏதேச்சாதிகார சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி போராடியதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சல், அறிவாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு நமக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாக திகழ்கின்றன.
தியாகத்தைப் போற்றும் இந்நாளில், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், ஜனநாயகம் நிலைநாட்டப்படவும் நாம் உறுதியேற்போம்.
மக்களிடையே அன்பும், பரஸ்பர பாசமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவும், உலகெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் தழைத்தோங்கவும் இப்புனித நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அவர்கள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் மஸ்ஜித் ஹுதா பள்ளி செயலாளர் ஜாபர் அலி முஸ்தபா, பொருளாளர் ஜவஹர், நிர்வாகிகள் ஜெய்னுல் ஆபிதீன், எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி தலைவர் சலீம் தீன், துணைத் தலைவர் ஜவுளி காதர், செயற்குழு உறுப்பினர் மூசா காஜா, தொகுதி மற்றும் பகுதி நிர்வாகிகள் இரும்பு சிந்தா, லெப்பை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்