சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 22 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான தகுதிகள்1. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.2. சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.3. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராக பணி இருத்தல் கூடாது.4. தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
5. மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். (உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்).6. மலைப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத நிலையில் ஆண் உறுப்பினரை மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம்.
7. விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.8. 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப்படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
8 மலைப்பகுதிகளில் 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாக கருதப்படலாம்.தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
கணினி திறன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் (Whatsapp)-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டோருக்கு மாதாந்திர அடிப்படை ஊதியம் ரூ.2500/- வழங்கப்படும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியான விண்ணப்ப படிவம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது வட்டார அளவிலான கூட்டமைப்பிலோ 29.05.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம், 2வது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101. தொலைபேசி எண்.0461- 2341282 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்