ஈராேடு அருகே டூவீலரில் காய்கறி கொண்டு வந்த விவசாயி கீழே விழுந்து பலி
மே 11, 2025 12:50 பிற்பகல் |
குமாரபாளையத்தில் டூவீலரில் காய்கறி கொண்டு வந்த விவசாயி நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.
குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், விவசாயி. இவர் சம்பவத்தன்று மணியளவில், காய்கறிகள், தேங்காய் ஆகியவைகளை குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வர வேண்டி, தனது டி.வி.எஸ். ஹெவி டூட்டி வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது, நிலை தடுமாறி, வண்டியுடன் கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள், இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த இவரது மகன் பாலசுந்தரம், 52, நேரில் வந்து பார்த்த போது, சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துக்கள்