advertisement

சென்னையில் இருந்து பெங்களூர் செல்வோரின் முதல் சாய்ஸ் கேஎஸ்ஆர்டிசி பஸ்

மே 15, 2025 2:59 முற்பகல் |

சென்னையில் இருந்து பெங்களூர் செல்வோரின் முதல் சாய்ஸ் கேஎஸ்ஆர்டிசி பஸ்

ஸ்ரீ பண்ணாரி அம்மன் எக்ஸ்பிரஸ்... ஹுன்சூர் - மைசூர் - ஈரோடு. ஒரு கர்நாடகா அரசு பேருந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தெய்வத்தின் பெயர் வைத்துள்ளனர். கர்நாடக சாரிகே வண்டிகள் வேகத்தில் என்றுமே டாப். திம்பம் மலைப்பாதையில் முன்னே சென்று கொண்டிருக்கும் tnstc பேருந்துகளை அசால்டாக ஓவர் டேக் எடுத்துக்கொண்டு வேகமாய் போவார்கள். ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து மைசூர் செல்லும் பேர் கர்நாடக சாரிகே வண்டிகள் எப்பொழுதும் கூட்டமாக தான் இருக்கிறது. மேலும் நமது tnstc பேருந்துகள் மைசூர் வரையே இயங்குகின்றன. மைசூரை தாண்டி உள்ள இன்டிரியர் கர்நாடகா பகுதியில் இருந்தும் கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு கர்நாடகா சாரிகே வண்டிகள் சேவையில் இருக்கின்றன. 

வால்வோ, எலக்ட்ரிகல் போன்ற புதிய வகை பேருந்துகளையும் ksrtc உடனடியாக தனது சேவையில் பயன்படுத்திக் கொள்கிறது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்பவர்கள் தங்களது முதல் சாய்ஸாக கர்நாடகா அரசு பேருந்துகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அம்பாரி உத்சவ், ராஜஹம்ஸா, போன்ற பல பெயர்களில் புதிய புதிய சொகுசு பேருந்துகளை தங்களது சேவையில் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் நமது tnstc போன்று குறைவான விலையில் அதிக நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளை ksrtc இல் பார்க்க முடிவதில்லை.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement