advertisement

நெல்லையில் மருத்துவ கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி

ஜூன் 23, 2025 2:27 முற்பகல் |

 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், ஓய்வு பெற்ற பொது மருத்துவத் துறை தலைவர் மருத்துவர் ம. முகமது ரபி நடத்தி வரும் மஸ்தான் மருத்துவமனை மற்றும் மஸ்தான் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும்  மாணவ மாணவிகளுக்கான மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி,  

10. ம் வகுப்பு,12. ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் காக்க நம் ஆரோக்கிய மலர மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி 
 ஆகிய முப்பெரும் விழா நிகழ்வில், நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  அப்துல் வஹாப் B  கலந்து கொண்டார்.

சிறப்புமிகு இந்நிகழ்வில் நெல்லை மாநகராட்சி மேயர்  ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப். கோதர் மைதீன், மாமன்ற உறுப்பினர்கள்  . மன்சூர் (20.வார்டு கழக செயலாளர்),   மாரியப்பன்,   சுப்பிரமணியன் அல்லா பிச்சை, வட்ட கழக செயலாளர்  புயல் மீனாட்சி,  அலி,  ஜெய்லானி, மானூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கானார்பட்டி  சாமுவேல், பாளை  சதீஷ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement