பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் 50 வது பட்டமளிப்பு விழா
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் 50 ஆவது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழாத் திறந்த வெளிக் கலையரங்கில் 19.07. 25 மாலை 6.50 மணிக்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் சே. மு . அப்துல் காதர் வரவேற்றுப் பேசினார். ஆட்சிக்குழுப் பொருளாளர் ஹாஜி பி.எஸ்.எம். இல்யாஸ் வாழ்த்துரை வழங்கிப் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எம். கே. எம். முகமது நாசர், தேர்வாணையர் பேராசிரியர் ஆ . ஹாமில், துணை முதல்வர் முனைவர் ரா . ஜேனட் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் 1163 மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றும் போது, அகில இந்திய அளவில் உள்ள 3370 கல்லூரிகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி 98 ஆம் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தேன். 25- 35 வரையிலான வயதுள்ள மாணவர்கள் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 47 % உயர் கல்வித் தகுதி பெற்றுள்ளோம். மதிய உணவுத் திட்டம் , கல்வி உதவித் தொகை ஆகியவற்றால் உயர் கல்வித் துறையில் தமிழ் நாடு சாதித்து உள்ளது . மாணவர்களின் பெற்றோர் உதவி இல்லாமல் இது சாத்தியம் இல்லை. 14% தொகை அகில இந்திய அளவில் கல்விக்குச் செலவளிக்கப் படுகிறது .
க்களுக்கு நிறைய உதவ வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுகையில் சிறந்து விளங்குகிறது. மாணவர்கள் முன்னேற பல துறை திறன் , தொழில் நுட்ப அறிவு அவசியம். பரந்த மனத்துடன் மக்களுக்கு அள்ளி வணங்குங்கள். அறிவையும் உண்மையும் நம்புங்கள். நல்ல தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். தேசத்திற்கு சேவை செய்யும் உரிமம் இப்பட்டம். உங்கள் அறிவை மக்கள் உயர்வுக்குப் பயன்படுத்துங்கள். 43 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கல்லூரி என்னை உருவாக்கியது.
என் வாழ்வின் உயர்வுக்கு ஆசிரியர்கள் காரணம். என் இறைவனே நீ எனக்கு ஞானத்தை அருள்புரிந்து நல்லோர்களுடன் சேர்க்க வேண்டுகிறோம். தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்க காமராசரைப் போன்ற கல்வியில் கவனம் செலுத்தியவர்கள் காரணம். சமய நல்லிணக்கம் தமிழ்நாட்டின் அடையாளம். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சமய நல்லிணக்க அடையாளம். 50% உயர் கல்வி சதவீதம் 100 சதவீதமாக மாற வேண்டும். " என்று பேசினார். பட்டம் பெறாதோர் அறிக்கையை மூத்த பேராசிரியரும் மாணவர் நலன் புல முதன்மையருமான பேராசிரியர் ச மகாதேவன் அறிக்கையாக அளித்தார். பட்டமளிப்பு விழா உறுதி மொழியை கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் வாசிக்க பட்டதாரிகள் உறுதி ஏற்றனர். விலங்கியல் துறைஇணைப் பேராசிரியர் முனைவர் ஜாஹிர் ஹுசைன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்