advertisement

ஜாதி மோதலை தூண்டும் விதமாக பேசிய நபரை கைது செய்ய வேண்டும் - கோவில்பட்டி டிஎஸ்பி.,யிடம் பிஎம்டி அமைப்பு புகார் மனு

டிச. 03, 2024 4:46 முற்பகல் |

யூடியூபில் ஜாதி மோதலை தூண்டும் விதமாக பேசிய நபரை கைது செய்யக்கோரி கோவில்பட்டி டிஎஸ்பி.,யிடம் பிஎம்டி பாதுகாப்பு இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பாக பிஎம்டி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் வடக்கு மாவட்ட செயலாளர் மகாராஜா பாண்டியன், கோவில்பட்டி டிஎஸ்பியிடம் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது நான் youtube-ல் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது செந்தில் என்ற நபர், ஒரு யூட்யூப் சேனல் ஒன்றில் பேசும் போது, பிசிஆர் சட்டம் குறித்தும் மேலும்  சாதிகுறித்து பேசியது தமிழகத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. மேலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அவர் பேசியிருந்தார். 

மேலும் மறைந்த பெண் முதலமைச்சர் குறித்தும் அவதூறான கருத்துக்களை அந்த வீடியோவில் கூறியுள்ளார் எனவே சாதிய மோதலை தூண்டும் வகையிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசிய அவரை உடனே கைது செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
  • V
    Vel டிச. 03, 2024 5:50 முற்பகல்
    Great news
    1 0
advertisement
advertisement