advertisement

தூத்துக்குடியில் காமராஜா் சிலைக்கு சி.த.செல்லப்பாண்டியன் மாியாதை

ஜூலை 16, 2025 7:25 முற்பகல் |

தூத்துக்குடியில் காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.

தூத்துக்குடி காமராஜர் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கும் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள சிலைக்கும் வஉசி மார்க்கெட் முன்பு அமைந்துள்ள சிலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இனிப்பு வழங்கினாா். பின்னர் தமிழ்நாடு காமராஜர் பேரவை சார்பில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டன. விவிடி மெயின் ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது. பிரையன்ட் நகர் 1வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து  இனிப்புகள் வழங்கப்பட்டது.. 30வது வார்டு பாஜக நிர்வாகி காசிலிங்கம்  ஏழை எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கினாா். 

விழாவில் மாநில வர்த்தகஅணி துணை செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்,  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் கவுன்சிலா்கள் அகஸ்டின், எட்வின் பாண்டியன், சகாயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், சுயம்பு அருண்குமார் அந்தோனி ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் சாந்தி முன்னாள் வட்ட செயலாளர் அன்பு லிங்கம் திருமணி பாபநாசம் ஜெகதீஸன் பாக்யராஜ் வெலிங்டன் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் சங்கர் ராஜேந்திரன் பேச்சியப்பன் தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் மற்றும் ஸ்டாலின் ராஜ்குமார் மகாராஜன் சந்தனராஜ் சேவியர் முனியசாமி ஆபிரகாம் ஆறுமுகம் மணிகண்டன் ராஜசேகர் அந்தோனி ராஜ் சித்திரைவேல் சிவசாமி பெருமாள் சுப்புராஜ் மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா உள்பட பலா் கலந்து கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement