advertisement

ரேஷன்கடைகளில் பொருட்கள் பெற விருப்பமில்லையா ?- இராமநாதபுரம் டிஆர்ஓ., முக்கிய அறிவிப்பு

ஜூலை 16, 2025 9:49 முற்பகல் |

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாமென ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு தகவல் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலை தளத்தின் (WWW.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்து கொள்ளலாமென ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement