தூத்துக்குடியில் விரைவில் பல்நோக்கு மருத்துவமுகாம் : அமைச்சர் தகவல்
தூத்துக்குடியில் ஜூலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது என தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், ஓரணியில் தமிழ்நாடு தெருமுனை பிரச்சார கூட்டம் சண்முகபுரத்தில் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூா்யகாந்த் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளா்கள் செல்வின், ரவி, பிரவீன்குமாா், முகமது ஜெயலாப்தீன், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளா்கள் செல்வசுபாஷ், காஜா முகைதீன், ஆலிவா் அலாய் ஸ்டெபின், முகமது பாசில், பெத்துகணேஷ், பாலசெல்வகுமாா், ஈனமுத்து, ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர இளைஞர் அணி அமைப்பளா் அருண்சுந்தா் வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில், மறைந்த கருணாநிதி வழியில் எல்லாருக்கும் எல்லாம் என்கிற வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தின்படி பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எல்லா மாநிலத்துக்கும் இதுபோல் தான் நிதி ஒதுக்குகிறது அதிலும் பல்வேறு திட்டங்களில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. ஆனாலும் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில், தொழில் வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ளோம். தனிநபர்களின் வருமானம் உயர்ந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் 11 சதவீதம் உள்ளது. புதிய தொழில் நிறவணங்கள் தொடங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது மேலும் ஓரு புதிய திட்டமான ஜுலை கடைசி வாரத்திலிருந்து ஓவ்வொரு சனிக்கிழமையும் பல்நோக்கு உயா் மருத்துவமுகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் இருதயம், சிறுநீரகம், முளை, புற்றுநோய், உள்ளிட்ட உயா்சிகிச்சைக்கான சிறப்ப மருத்துவா்கள் பங்கு பெற இருக்கிறாா்கள். நாம்அனைவரும் இணைந்து இந்த மருத்துவமுகாம் பற்றிய தகவல்களை மக்களிடைேய கொண்டு சோ்க்க வேண்டும் முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக முதலில் கேரளாவை சொல்வார்கள் ஆனால் தற்போது தமிழகம் 81 சதவீதத்திற்கு சென்றுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தான் குறிப்பாக பல்வேறு தொழில் நிறுவணங்கள் உருவானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவரும் வேலை வாய்ப்புகளை தேடி தூத்துக்குடியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் எந்த பகுதியில் எந்த தொழில் தொடங்கினால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற நோக்கத்தோடு அந்த பகுதிகளில் தொழில் நிறுவணங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெருக்கி வருகிறார். நமது பகுதியில் கடல், வான், தரை வழி போக்குவரத்துகள் உள்ளதால் கார் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது இதன்மூலம் தமிழகம் உலகம் முழுவதும் சென்றடையும் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், தலைமை பேச்சாளா் சரத்பாலா, இருதயராஜ், இளம் பேச்சாளா் சஞ்சய், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமாா், பிரபு, சுரேஷ், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ்வரன்சிங், தகவல் தொழில்நுட்ப அணி ெதாகுதி ஓருங்கிணைப்பாளர் அண்ணாத்துரை, கவுன்சிலா்கள் பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், பிடிஎம்ஸ் தலைவர் சுப்பிரமணியன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உத்திரபாண்டி, அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன் நன்றியுரையாற்றினாா்.
கருத்துக்கள்