அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்
நெல்லையில் முதன்முறையாக அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையில் கால், கணுக்கால், பாதம், ஆர்த்தோ பிரிவு மற்றும் முதுகெலும்பு (கீ ஹோல்) அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கால், கணுக்கால், பாதம், ஆர்த்தோ பிரிவு, டாக்டர். பிரேம சந்திரன் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.மேலும் முதுகெலும்பு நுண்துளை (கீ ஹோல்) அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர். மணிகண்டன் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. மேலும் பிசியோதெரபி மருத்துவ பிரிவில் Laser shock therapy என்னும் புதிய கருவி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர். பிரான்சிஸ் ராய், டாக்டர். ஜி ஜி செல்வன், டாக்டர் அந்தோணி ராஜ், டாக்டர். பாலமுருகன், டாக்டர்.பாலாஜி சர்மா, டாக்டர். முத்துராமன், டாக்டர் அபுபக்கர், மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய மருத்துவ பிரிவு திங்கள் முதல் சனி வரை (செவ்வாய் மற்றும் ஞாயிறு தவிர) வார நாட்கள் அனைத்திலும் செயல்படும் இந்த பிரத்தியேக கால், பாதம், கணுக்கால், மற்றும் முதுகெலும்பு (கீ ஹோல்) நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவ வசதியினை நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
கருத்துக்கள்