கும்பகோணம் : காதலி விலகியதால் விரக்தி... வாலிபர் தற்கொலை!
10 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் பிரிந்து சென்றதால் மனமுடைந்த சதீஷ்குமார் (25) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன், சதீஷ்குமார் நீண்டகாலமாக காதலில் இருந்தார். இருவருக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, காதல் முடிவுக்கு வந்தது.
இதனால், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சதீஷ்குமார், தனது குடும்பத்துடன் தற்போது தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே அவர் மனச்சோர்வில் இருந்ததாக கூறப்படுகிறது.சம்பவ நாளில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்தார்.
தகவலறிந்த தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்