கோவில்பட்டி அரசு பள்ளியில் ஏஐ பயிற்சி
ஜூலை 16, 2025 2:39 முற்பகல் |
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI Artificial Intelligence) தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் மாணவ மாணவியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுவதைப் பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக, பள்ளி மாணவிகள் மேளம் இசைத்து, கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்