advertisement

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் வழி அறிவிப்பு!

ஜூலை 05, 2025 4:19 முற்பகல் |

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி வெளியே வரும் வழி குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு 07.07.2025ம் தேதி காலையில் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு காவல் துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு பிரகாரமானது யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகம் சம்மந்தமான பூஜைகள் நடைபெரும் முக்கிய பகுதி ஆகும். எனவே பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது. 

பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக வருவதை தவிர்க்கவும். கோவில் பிரகாரங்கள், வசந்த மண்டபம் அருகில் மற்றும் கோவில் அருகில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இடவசதிக்கு ஏற்ப போதுமான பத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

ராஜகோபுரத்தை பார்த்து (ராஜகோபுரம் தெரியும் இடங்கள்) கும்பாபிஷேக தரிசனம் செய்யும் இடங்கள்

கோவில் கடற்கரை பகுதியில் (Sea shore) ராஜகோபுரம் தெளிவாக காணலாம். மேலும் கீழ்கண்ட இடங்களில் இருந்து ராஜகோபுரத்தை கண்டு கும்பாபிஷேகத்தை காணலாம். மேலும் தூத்துக்குடி ரோடு JJ நகர் பார்க்கிங், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி பைரவர் கோவில் அருகில், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி தாய் Resort பின்புறம், நாழிகிணறு பழைய பேருந்து நிலையம் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, ஆலயம் D பிளாக் மற்றும் ஆலயம் H பிளாக் முன்பு, சண்முகர் விடுதி ஆகிய இடங்களிலும் காணலாம். மேலும் இவ்விடங்களில் கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காணலாம்.

பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும் வழி

பகத்சிங் பேருந்து நிலைய வாகன நிறுத்தம், மாட்டுத்தாவணி வாகன நிறுத்தம், TB ரோடு ஐடியல் பார்க்கிங் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் TB ரோடு, மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், கோவில் வடக்கு ஆர்ச் வழியாக கோவில் வடக்கு பகுதிக்கு (யாகசாலை, ராஜகோபுரம்) இடவசதிக்கேற்ப போதுமான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களில் கூட்டம் அதிகமாகும்பட்சத்தில் மாற்றுப்பாதையில் கோவில் மற்றும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

JJ நகர் பார்க்கிங் & TB ரோடு வழியாக வரும் பக்தர்கள், தாலுகா அலுவலகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம், மினிசிவமுருகன் லாட்ஜ் ஜங்ஷன் (நாடார் தெரு), சன்னதி தெரு (சுபா மெடிக்கல் ஜங்ஷன்), சன்னதி தெரு (புளியடி சந்தனமாரியம்மன் கோவில் ஜங்ஷன்), புளியடியம்மன் கோவில் தெரு, சபாபதி பிள்ளையார் கோவில் (நவாபழ சாலை), நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.

தூத்துக்குடி ரோடு வழியாக வரும் பக்தர்கள், பகத்சிங் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.

திருநெல்வேலி ரோடு வழியாக வரும் பக்தர்கள், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.

பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு வழியாக வரும் பக்தர்கள், முருகாமடம் (தெப்பகுளம்), முத்தாரம்மன்கோவில் தெரு ஜங்ஷன், தெற்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.

கிழக்கு ரதவீதி மற்றும் மற்றப்பகுதிகளில் இருந்து சன்னதி தெரு வழியாக பக்தர்கள் கோவில் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.

பக்தர்கள் வெளியே நடந்து வரும் வழி

கோவில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், TB ரோடு வழியாக JJ நகர் பார்க்கிங் அல்லது TB ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு அல்லது பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு மற்றும் மற்றப்பகுதிகளுக்கு செல்லவும்.

கோவில் சன்னதி தெரு (கோவில் மத்திய பகுதி) வழியாக வெளியே வரும் பக்தர்கள் தேரடி (கீழக்கு ரதவீதி) வந்து கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச், மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேவலி ரோடு செல்லலாம். அல்லது தேரடி (கிழக்கு ரதவீதி) கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகும்) வழியாக பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும்.

கோவில் தெற்கு பகுதி (கடற்கரை, நாழிகிணறு) பகுதிகளில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வந்து பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். அல்லது முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன் வந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி இரும்பு ஆர்ச் ஜங்ஷன் வழியாக மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு செல்லவும்.

கடற்கரை பகுதியில் கூட்டம் அதிகாமாக இருக்கும்பட்சத்தில் (தேவைப்படும்பட்சத்தில்) நாழிகிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை Quarters, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை - முருகாமடம் அருகில்) செல்லவும். அல்லது கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை - முருகாமடம் அருகில்) செல்லவும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement