advertisement

விஜயின் அரசியல் முடிவால் சிலர் அதிர்ச்சி  கனிமொழி பேட்டி!

ஜூலை 05, 2025 6:17 முற்பகல் |

 

விஜயின் அரசியல் முடிவால் சிலர் அதிர்சசி அடைந்துள்ளதாக நெல்லையில் கனிமொழி பேட்டியின் போது கூறினார்.

அப்போது, "த.வெ.க. தனித்து தேர்தலில் போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இல்லை. அது, த.வெ.க.யும் பாஜகவும் தான் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கலாம். பலர் தனித்துப் போட்டியிடலாம், அது அவர்களது தேர்வு. அதற்காக திமுக கூட்டணிக்கு வெற்றியில் பாதிப்பு ஏற்படாது. மக்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது திமுக கூட்டணி முன்னணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது" என்றார்.

மேலும், "தமிழ்நாடு தொடக்கத்திலிருந்தே ஒரே அணியில் இருந்து செயல்பட்டு வருகிறது. யாரை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பது முதல்வரின் முடிவு. அவர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் எவரும் கூட்டணியில் இணையலாம்.

விஜய் தனது அரசியல் முடிவுகளை எடுத்திருக்கிறார். அதனால் சிலர் அதிர்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் மக்கள் யாருக்கெதிராக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்" எனவும் கனிமொழி தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement