advertisement

செந்தூர் கோவில் கும்பாபிஷேக  பாதுகாப்பு பணிகள்: எஸ்பி ஆய்வு

ஜூலை 05, 2025 11:02 முற்பகல் |


 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட எஸ்பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். 

திருச்செந்தூர்   சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 7ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திருச்செந்தூரில் முகாமிட்டு கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்

மேலும் பக்தர்கள் மீது புனித நீரை தெளிப்பதற்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை பார்வையிட்டும் மற்றும் குடமுழுக்கு நிகழ்வை நேரலையில் காண்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள LED திரைகளின் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement