கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் கடவுள் மறுப்பாளர்கள் பெயர் ? இந்து முன்னணி கண்டனம்
ஜூலை 05, 2025 7:31 முற்பகல் |
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் கடவுள் மறுப்பாளர்கள் பெயர் அச்சிடப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி ராகவேந்திரா வெளியிட்ட செய்திகுறிப்பில், உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு திராவிட கட்சிகளில் இருக்கும் அரசியல் கட்சியில் இந்நாள் முன்னாள் கடவுள் நம்பிக்கை மறுப்பாளர்கள் பெயர் அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டு இருக்கிற நிலையில் ஏன் சைவ நெறியைஉலகமெல்லாம் கொண்டு செல்லும் பாரம்பரிய மிக்க தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் மட ஆதீன பெயர் இடம்பெறவில்லைஏன்?இது மன வேதனைக்குரிய விஷயம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்