advertisement

வழக்கில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்!

ஜூலை 05, 2025 11:38 முற்பகல் |

 

இரண்டு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் பயணித்த காரும், சேலத்​தில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு காரும் உளுந்​தூர்​பேட்டை பகு​தி​யில் மோதி விபத்துக்குள்​ளாகின.

இரண்டு கார்​களும் லேசாக சேதமடைந்​த நிலையில் விபத்து குறித்து பேசிய ஆதினம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்​ற​தாக குற்றம்  ​சாட்​டி​னார் மதுரை ஆதினம், இதற்கு காவல் துறை மறுப்பு தெரி​வித்​தது.இந்த நிலை​யில், உயர்நீதி​மன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்​ பேரில், இரு சமூகத்​தினர் இடையே பகைமையை ஏற்​படுத்துதல் உட்பட 4 பிரிவு​களின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்​தனர்.

இந்​நிலை​யில், சென்னை சேத்​துப்​பட்டு காவல் நிலைய வளாகத்​தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​ அனுப்​பி இருந்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement