advertisement

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவி சாதனை -துணை முதல்வர் வாழ்த்து!

ஜூலை 05, 2025 10:55 முற்பகல் |


 

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார். 

இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 500 மீட்டர் பந்தயத்தில் 6 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக, ஹோலி கிராஸ் ஆங்கில இன்டியன் பள்ளியில் கல்வி பயிலும் எல்கேஜி மாணவி "அன்விதா சிவக்குமார்" 5 வயது ஐபிஎன் அகடமி சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று முதல் இடத்தை வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும்பெற்று மூன்றாம் இடத்தை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும், விளையாட்டுத்துறைக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தமிழக அரசு விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளும் ஊக்கமும் ஆக்கமுமே 5 வயது சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மன தைரியத்துடன் கலந்து கொண்டு சாதனை படைக்க முடிந்துள்ளது. அந்த சாதனையை பெற்ற மாணவியை சென்னைக்கு வரவழைத்து பசுமை வழி சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கி வாழ்த்து ரிவித்தார். 

மேலும் தனது திறமையின் மூலமாக சாதனைகள் பல தொடர வேண்டும், வெற்றிகள் குவிய வேண்டும் என்றும் மாணவியிடம் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் உடனிருந்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement