கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது
ஜூலை 21, 2025 2:38 முற்பகல் |
தூத்துக்குடியில் கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் காவல்துறையினர் மேட்டுப்பட்டி பகுதியில் சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கத்தி இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தாளமுத்துநகர் சுனாமி காலனியை சேர்ந்த நன்டல் (27) என்பதும், இவர் மீது தூத்துக்குடி தென்பாகம், வடபாகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்