advertisement

விடுமுறை தினம் - திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் குவிந்தனர்

ஜூலை 21, 2025 2:40 முற்பகல் |

 

திருச்செந்தூர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ( 20 ம் தேதி)  ஆடி கிருத்திகை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். வழக்கமாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு ஜெயந்திரநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement