advertisement

ஆக 29 ல் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்

ஆக. 28, 2026 5:44 முற்பகல் |

 

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பிற்காக ஆக.,29ல் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டமானது 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், ஆண்டுதோறும் வளர்ச்சித் திட்டம் தயாரித்து செயல்படுத்துதல் போன்றவற்றுக்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

2024ல் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 20ல் இருந்து 24ஆக அரசு உயர்த்தியது. இம்மாதம் இக்குழுவின் அதிகாரம் நிறைவடைவதால் மறுகட்டமைப்பு மீண்டும் நடக்க உள்ளது. இதற்காக ஆக., 29ல் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.செப்.,12ல் 50 சதவீத தொடக்கப் பள்ளிகளிலும், செப்.,19ல் எஞ்சிய தொடக்கப் பள்ளிகளிலும், செப்.,26ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், அக்.,10ல் நடுநிலைப் பள்ளிகளிலும் இக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement