advertisement

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை: 600 ஐ நெருங்கியது-

ஆக. 29, 2026 3:57 முற்பகல் |

 

நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற் பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது.

போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்ச ரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது.சுனாமி அலைகளையே மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் என அனைத் தையும் வாரிச்சுருட்டி சென்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலரும் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டு வரு கிறது. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 600- ஐ நெருங்கியுள்ளது. 2,500 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement