advertisement

பாஜகவை ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது"-எடப்பாடி பழனிச்சாமி

ஜூலை 21, 2025 4:12 முற்பகல் |

 

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையமாகக் கொண்டு, மாநில அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) முதன்முறையாக பாஜகவுக்கு எதிராகத் திறந்தவெளியில் விமர்சனம் எழுப்பியுள்ளார்.

'தமிழக மக்களை மீட்போம்' என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், "நாங்கள் ஏமாளி அல்ல. பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்," எனக் கூறினார். இது, கூட்டணியில் தலைமை வகிக்கிறோமென்று தெரிவிக்க முயலும் பாஜகவிற்கு எதிரான வலுவான பதிலடியாகவும், அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த கூட்டணியின் செயல்பாடுகள், முதலமைச்சர் வேட்பாளருக்கான நிலைப்பாடு, முடிவெடுப்பதில் யார் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பவை குறித்து இருதரப்புகளிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.
மேலும், “வாரிசுகள் ஆட்சி செய்யும் காலம் முடிய வேண்டும். அதற்காகதான் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்துள்ளோம். எங்களை யாரும் முடிவெடுக்க முடியாது,” எனவும் அவர் கூர்ந்தார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement