பாகிஸ்தானின் கோர முகம்! உலக நாடுகள் அறிவதற்கு 7 தலைவர்கள் தலைமையில் குழு!
மே 17, 2025 10:17 முற்பகல் |
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருவதை வெளிச்சத்திற்கு கொண்டு வர, உலக நாடுகளில் விழிப்புணர்வு உருவாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், ஏழு தனித்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுக்களில், காங்கிரஸின் சசி தரூர், பா.ஜ.க-வின் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சூலே, சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சஞ்சய் ஜா உள்ளிட்டோர் தலைமை வகிக்கின்றனர்.
பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் எதிர்நிலை வகிக்கும் இந்தியாவின் உறுதியான அணுகுமுறையை உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்