advertisement

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மே 17, 2025 4:37 பிற்பகல் |

 


சாத்தான்குளம் அருகே  கிணற்றுக்குள் கார் பாய்ந்து   விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை துடியலூரைச் சேர்ந்தவர் மோசஸ் (55). இவரது மனைவி வசந்தா (50) மற்றும் உறவினர்களான ரவி கோவில் பிச்சை (60) இவரது மனைவி கிறிஸ்ட்டியா கிருபா (50), பெரிசோன் (29) இவரது மனைவி சைனி பிரபா (26) இந்த தம்பதியின் குழந்தை ஸ்டாலின் (2), ஜெனிட்டா (26) ஆகிய 8பேர் கோவையில் இருந்து ஒரு ஆம்னி காரில் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வந்து கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே  வரும்போது இந்த கார் சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்த விபத்துக்குள்ளானது. இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா ரவி, கோவில் பிச்சை, அவரது மனைவி கிருத்திகா கிருபா, மற்றும் இரண்டு வயது குழந்தை ஸ்டாலின் ஆக 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் தப்பினார்கள். 

இதுகுறித்து தகவல் அறிஞ்சதும் சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 5பேரின் உடல்களை மீட்டனர். சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement