விசிக-வின் எழுச்சி பேரணி ஜூன் 14-ம் தேதிக்கு மாற்றம்..!
மே 17, 2025 4:35 பிற்பகல் |
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வருகிற 31-ஆம் தேதி 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பெயரில் மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், திருச்சியில் வருகிற 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பேரணி ஜூன் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்