தூத்துக்குடியில் 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி திறந்து வைப்பு
தூத்துக்குடியில் அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிட்ட 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 7 இடங்களில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் நிதித்திட்டம், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினையும், சத்திரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், லெவிஞ்சிபுரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், ஜார்ஜ் ரோடு பகுதியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், குரூஸ்புரம் மற்றும் அமுதா நகர் பகுதிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.27 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களையும் மற்றும் அமுதா நகர் பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.13.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும் என மொத்தம் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
கருத்துக்கள்