விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை : தூத்துக்குடி எஸ்.பி., வழங்கல்
மே 17, 2025 4:25 பிற்பகல் |
தூத்துக்குடியில் வாகன விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சத்திற்கான எஸ்பிஐ வங்கி காப்பீட்டுத் தொகைக்கான வரைவோலையை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சேசு ஆல்வின் என்பவர் கடந்த 10.08.2024 அன்று ஆத்தூர் பழைய காயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் ஸ்பிக் நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் போலீஸ் சேலரி பேக்கேஜ் கணக்கில் சம்பளம் பெற்று வந்தார்.
இதனையடுத்து மேற்படி வங்கி சார்பாக வழங்கப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சேசு ஆல்வின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
கருத்துக்கள்