பஞ்சாப்பில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ. 40 லட்சம் கொள்ளை..!
மே 31, 2025 2:58 முற்பகல் |
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தின் ரஹானா ஜட்டன் கிராமத்தில் பஹ்வாரா - ஹொசிர்பூர் நெடுஞ்சாலையில் வங்கி ஒன்று உள்ளது.
இந்த வங்கியில் இன்று ஊழியர்கள் வழக்கமான பணியை மேற்கொண்டிருந்துள்ளனர். அங்கு வாடிக்கையாளர்களும் பணத்தை எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், காரில் வந்த 03 பேர் கும்பல் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.
அவர்கள் வங்கி மேலாளர், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியதோடு, வங்கியில் இருந்து ரூ. 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





கருத்துக்கள்