அகமதாபாத் விமான விபத்து சம்பவம்: ரயில்வே சிறப்புக் குழு விசாரணை!
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தில் ரயில்வே சிறப்புக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மருத்துவர்கள் விடுதியின் மீது விமானம் விழுந்ததால், அங்கு இருந்த 7 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து, விமான விபத்து விசாரணை பணியகம் , குஜராத் மாநில போலீசார், ஏர் இந்தியா நிறுவனம், அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் விமான விபத்து நிகழ்ந்த இடம், அகமதாபாத் விமான நிலையம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே சிறப்புக் குழுவும் விசாரணையில் இறங்கி உள்ளது. விமான விபத்து நிகழ்ந்தால் அதில் விமானத் துறையை விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்பதற்காக ரயில்வே துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொள்வது வழக்கம். இதேபோல, இதற்கு முன்பு நடைபெற்ற விமான விபத்துக்களில் ரயில்வே சிறப்புக் குழு விசாரணை நடத்தி உள்ளது. மேலும், ரயில் விபத்துகளிலும், விமான சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே சிறப்புக் குழு அறிக்கை தயார் செய்யும் அந்த அறிக்கையில் விமானம் புறப்பட்டதில் இருந்து அதில் ஏற்பட்ட பிரச்சனை, விமானிகளின் பேச்சுவார்த்தை, அவர்களின் செயல்பாடுகள், பயணிகளின் செயல்பாடுகள் மற்றும் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது வரையிலான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும் என்று தெரிகிறது.





கருத்துக்கள்