கள்ளக்காதலனின் திட்டத்தில் விழுந்த தாய்....! கணவன், மகள் இருவரையும் கொலை செய்துவிட்டு நாடகம்...!
தெலுங்கானா, பூபால பள்ளி மாவட்டம், ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி, முதல் மனைவி இறந்த பிறகு தடிசர்லாவை சேர்ந்த கவிதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தனக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார்.
இந்நிலையில்,அவரது மனைவி கவிதா, ராஜ்குமார் என்பவருடன் கள்ளக்காதல் உறவு வைத்துக்கொண்டார்.இதில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்த குமாரசாமி மனைவியிடம் இந்த உறவை விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.ஆனால், வற்புறுத்தப்படுவதை தவிர்க்க, கவிதா கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்து குமாரசாமியை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
இதனால் மகளும் சாட்சியமாக சந்தேகம் எழுப்பும் நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி வர்ஷினியையும் நள்ளிரவு ராஜ்குமார் கொலை செய்தார்.மேலும், பிணத்தை அரசு மருத்துவமனை பின்புறம் வீசியதும், கடந்த 25-ந் தேதி மீண்டும் பிணத்தை எடுத்து தனது பைக்கில் வைத்து கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்றார்.
சாலையோரம் வர்ஷினியின் பிணத்தை வைத்து பிணத்தின் மீது மஞ்சள் குங்குமம் பூக்களை தூவினார். மேலும், வர்ஷினியின் பிணத்தின் அருகே ஆதார் அட்டையை வீசிவிட்டு வந்தார்.இதில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதார் அட்டை அடையாளத்தை வைத்து கவிதாவுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
அங்கு சம்பவ இடத்திற்கு சென்ற கவிதா, யாரோ தனது மகளை கொலை செய்து விட்டதாக கதறி துடித்து நாடகம் ஆடினார். மேலும், கவிதாவின் நடத்தையில் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கருத்துக்கள்