advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 8பேருக்கு குண்டாஸ்

செப். 20, 2025 5:18 பிற்பகல் |

 


தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ, கஞ்சா, திருட்டு, கொலை மிரட்டல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி வடபாகம் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.08.2025 அன்று வீடு புகுந்து திருடிய வழக்கில் சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33) என்பவரையும், கடந்த 23.08.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் கடத்திய வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வெள்ளைப்பாண்டி (29) என்பவரையும், 

கடந்த 25.08.2025 முறப்பநாடு காவல் நிலைய கஞ்சா வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் மலையரசன் (எ) மகேஷ் (24) ஆகியோரையும், கடந்த 20.08.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் ராஜலிங்கம்(26) மற்றும் கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துராஜ்(23) ஆகியோரையும்,

கடந்த 25.08.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட புதுக்கோட்டை ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன்(25) என்பவரையும், கடந்த 25.08.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட T.V.K.நகர் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன் (30) என்பவரையும்,

கடந்த 25.08.2025 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜமுனியசாமி மகன் சுரேஷ் (34) என்பவரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்படி காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 105பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement