advertisement

திருவாரூரில் இன்று விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

செப். 20, 2025 7:00 முற்பகல் |

 


தவெக தலைவரும் நடிகருமான விஜய், நாகையில் சனிக்கிழமை பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இடம், திடீரென மாற்றப்பட்டுள்ளது. நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்புக் காரணங்களை கூறி காவல்துறை அனுமதி மறுத்ததால் அண்ணா சிலை உள்ள பகுதிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

காலை 11 மணிக்கு தொடங்கி, 30 நிமிடங்களுக்குள் உரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விஜயின் வாகனத்தை அனுமதியில்லாத யாரும் பின் தொடரக்கூடாது என்பன உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வரவேற்பு பேனர் வைக்கக்கூடாது எனவும், பரப்புரைக்கு வருவோர் கையில் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது எனவும் நிபந்தனைகள் 

இந்நிலையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ள‌ பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதால் பரப்புரை நேரத்தில் மின் நிறுத்தம் செய்ய தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தவெக நாகை மாவட்ட செயலாளர் இது தொடர்பாக நாகை மின் வாரிய அதிகாரியிடம் மனுவும் அளித்துள்ளார். நாகையைத் தொடர்ந்து, திருவாரூரிலும் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ள பரப்புரைக்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement