இனிகோ நகர் கடற்கரையில் கூட்டு தூய்மைப் பணி
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் கூட்டு தூய்மைப் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம், வீகேன் டிரஸ்ட் மற்றும் செயிண்ட் மேரீஸ் கல்லூரி, வேல்ட் கவுன்சில் பார் உமன் ரைட்ஸ் உள்பட பல்வேறு சமூக நிறுவனத்தின் சார்பில் இனிகோ நகர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற கூட்டு தூய்மைப்படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுபோன்ற தூய்மைப் பணிகள் மூலம் மக்களுக்கு கடலையும் கடற்கரையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றார். பின்னர் கடற்கரை சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைபாதையை பார்வையிட்டு, இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்து, பனைமர விதைகளை கடற்கரையோரங்களில் விதைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ரெக்ஸ்லின், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், டிரஸ்ட் தலைவர் ஏஞ்சலின், செயலாளர் முத்துராஜ் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்