advertisement

பிரார்த்தனை கூடத்தில் கன்னியாஸ்திரி தற்கொலை

செப். 17, 2025 2:34 முற்பகல் |

 

கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர் மேரி கொலாசிஸ்கா (34து). இவர் கடந்த 3 ஆண்டுகளாக கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் சேவையாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மடத்தில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் மேரி கொலாசிஸ்கா தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக கன்னியாஸ்திரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி மேரி கொலாசிஸ்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி கொலாசிஸ்காவை சந்திக்க அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற பிறகுதான் மேரி கொலாசிஸ்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால், உறவினர்களுக்கும், இந்த தற்கொலை சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் கொல்லம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement