நடிகர் ராஜேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்! -
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1974ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ’அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் 1979ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் திரைக்கதையில் பாலகுரு இயக்கத்தில் வெளியான ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் காதாநாயகனாக அறிமுகமானார் ராஜேஷ்.
அதன் பின் சில படங்களில் நாயகனாக நடித்தவர், மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிப்புக்கென ஒரு முகம் நினைவுக்கு வருமானால் அது ராஜேஷின் முகமாகவே இருக்கும். பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் அவரது நடிப்பு இப்போது வரை நினைவுகூறத்தக்கது.
மேலும் சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். சமீபகாலமாக யுடியூப் பக்கம் ஒன்றை நடத்தி வந்த ராஜேஷ் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இதற்கிடையே, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் இன்று (மே 29) காலை உயிரிழந்தார்.
இன்று காலை அவருடைய வீட்டில் இருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.





கருத்துக்கள்