advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 லோகல் வங்கி அலுவலர் வேலைவாய்ப்பு!

மே 30, 2025 8:57 முற்பகல் |

 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Local Bank Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரிவான தகவல்கள்:விண்ணப்ப எண்: HRDD/RECT/01/2025-26மொத்த காலியிடங்கள்: 400

சம்பள வரம்பு: மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. தேர்வு செய்யப்பட்ட மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.05.2025 அன்றுக்குள் 20 முதல் 30 வயதுக்குள்.இருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டு தளர்வு

ஓபிசி: 3 ஆண்டு தளர்வு

மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு

நேர்முகத் தேர்வு
நுழைவுச்சீட்டு விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி: ₹175

பிற பிரிவினர்: ₹850

கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்

தேர்வு மையங்கள் (தமிழ்நாடு):
சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், கடலூர், சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், வேலூர்

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.iob.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement