கன்னட மொழி விவகாரம்: "மன்னிப்பு கேட்க மாட்டேன்" - கமல்ஹாசன் உறுதி
மே 30, 2025 9:13 முற்பகல் |
நடிகர் கமல்ஹாசன் தக் லைப் பட புரோமோஷனில் கன்னடமாெழி குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கன்னட அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தபின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா மீதான என் அன்பு பரிசுத்தமானது. கேரளா மீதான என் அன்பு பரிசுத்தமானது. ஆந்திரா மீதான என் அன்பு பரிசுத்தமானது. அஜெண்டாவுடன் செயல்படும் சிலரைத் தவிர யாருக்கும் என் மீது ஐயம் வராது. நான் இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன். தவறு செய்யவில்லை என்றால், மன்னிப்பு கேட்கமாட்டேன். இப்படித்தான் என் வாழ்வியல் இருந்திருக்கிறது. " என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்