advertisement

இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்! ஆர்சிபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்

ஜூன் 04, 2025 7:50 முற்பகல் |

 

அடுத்த ஆண்டு சென்னை அணியிடம் இருந்து சிறந்த கம்பேக்கை எதிர்பார்க்கிறேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூர் வெற்றிபெற்றதற்கு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு சீசன் பல ஆச்சர்யங்கள் நிறைந்திருந்தது. ஆர்.சி.பி கோப்பையை வென்றுள்ளது நிறைவான ஒரு முடிவு. விராட் கோலி இந்தக் கோப்பைக் கனவை பல ஆண்டுகளாக சுமந்துள்ளார். இப்போது இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்” எனவும் தெரிவித்ததோடு சென்னை குறித்தும் பதிவிட்டுள்ளார்.  “சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து அடுத்த சீசனில் சிறப்பான COME BACK-யை எதிர்பார்க்கிறேன்” என முதல்வர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement