சார் களை கன்ட்ரோல் செய்யுங்கள் - தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான 'எடப்பாடி பழனிசாமி' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்