advertisement

மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார் - மு.க.ஸ்டாலின்

ஆக. 04, 2025 9:59 முற்பகல் |

 

வங்காள மொழியினை 'வங்கதேச மொழி' எனக் குறிப்பிட்டது, நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு நேரடி அவமதிப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது வங்காள மொழியினை 'வங்கதேச மொழி' எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும்.

இத்தகைய அறிக்கைகள் தெரியாமல் நிகழ்ந்த பிழையோ தவறோ அல்ல. இந்தியாவின் பன்மைத்துவத்தைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தி, ஒருவரது அடையாளத்தைக் கொண்டு தாக்கும் ஆட்சியின் கோர மனநிலையையைத்தான் இவை அம்பலப்படுத்துகின்றன.

இந்தி அல்லாத மொழிகளின் மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படும் நேரத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் மொழியையும் மக்களையும் காக்கும் அரணாகச் சகோதரி மம்தா பானர்ஜி திகழ்கிறார். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தராமல் அவர் ஓயமாட்டார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement