advertisement

திருப்பத்தூர்- பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு

ஆக. 04, 2025 8:09 முற்பகல் |

 

திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த முகிலன், வகுப்பு வரவில்லை என பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் துறையை நாடினர். இந்த சூழலில்தான் பள்ளி வளாகத்தில் இருந்த கிணற்றில் முகிலன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து , திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்ட உறவினர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவர்கள், உடம்பில் ரத்த காயங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

பள்ளி நிர்வாகத்திற்கு காவல் துறை துணைபோவதாகவும் தெரிவித்தனர்.தொடர்ந்து மாணவனின் மரணத்திற்கு நீதிகேட்டு, அதிமுக, தவெக, இந்து முன்னணி அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement