advertisement

தவெக மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் ?

ஆக. 04, 2025 5:32 முற்பகல் |

 


தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்தார். இதையடுத்து தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது


ஆனால் விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து 17-ந்தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ந்தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல்22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement