நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட விருந்து..!
நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் 109 உணவு வகைகளுடன் எதிர் கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட விருந்து வைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலான “மக்களைக்காப்போம்... தமிழகத்தை மீட்போம்...” என்ற பிரச்சார சுற்றுப் பயணம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பழனிசாமி நெல்லையில் தங்கியிருந்த தனியார் விடுதியிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு அவருக்காக பிரம்மாண்டமான இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் மொத்தமாக 109 வகை உணவுகள் இடம் பெற்றிருந்தன. வட இந்திய ரொட்டிகள்,15 வகை தோசைகள், மூன்று போலி, 10 இனிப்புகள், 7 வகை நீராவி உணவுகள், 4 சூப்புகள் மற்றும் குங்குமப்பூ ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.
இவ்விழாவில் நத்தம் விஸ்வநாதன்,விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேளதாள இசையுடன் வரவேற்கப்பட்ட பழனிசாமி, பின்பு நயினார் நாகேந்திரனுடன் அவரது வீட்டில் 40நிமிட அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
கருத்துக்கள்