advertisement

ஆதிதிராவிடர்,பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழிதேர்வு பயிற்சி : ராமநாதபுரம் கலெக்டர் தகவல்

ஆக. 04, 2025 7:58 முற்பகல் |

ஆதிதிராவிடர் , பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ள தென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார் .

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி , மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் , பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. 
அதன் அடிப்படையில் , ஆதிதிராவிடர் , பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி  அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி நர்சிங் , பொது நர்சிங் , மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.  21 முதல் 35 வயதிற்குள்ளும். குடும்பவருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு ஒன்பது மாதமும் மேலும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement