தூத்துக்குடியில் மக்கள்டெய்லி கலையகம் திறப்பு விழா
தூத்துக்குடியில் மக்கள்டெய்லி செய்தி தொலைக்காட்சி கலையகம் திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 3ஆம் தேதி) நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரபலமாக இயங்கி வரும் மக்கள் டெய்லி செய்தி குழுமத்தின் சார்பில் மக்கள் டெய்லி தொலைக்காட்சி கலையகம் திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 3ஆம் தேதி) நடைபெற்றது. . இந்நிகழ்ச்சியில் வரவேற்பு மற்றும் ஒளிப்பதிவு இயக்கத்தினை ஆத்தூர் மணி குரூப் ஹோட்டல்கள் குழும இயக்குனர் ம. தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் ஜேம்ஸ்சுந்தர்சிங், மருத்துவர் மதன்மணவாளன், மருத்துவர் அனீஸ் ஆகியோரும், வழக்கறிஞர்கள் செங்குட்டுவன் ssp அசோக்,கிசிங்கர், ராஜேந்திரன், பாலசுப்பிரமணி மற்றும் எழுத்தாளரும்,தொல்பொருள்ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் (செல்வி) ஞான செல்வம் (ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்) , (செல்வி) ஞானச்சந்திரா (நீதித்துறை ஓய்வு) மக்கள் டெய்லி சிறப்பு செய்தியாளர் ஞானதுரை, முத்துப்பேட்டை தொழிலதிபர் பஷீர் அகமத், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார்,லதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிம்பு கண்ணன்,தாமிரபரணி அறக்கட்டளை முருகேசன், மாநில பூசாரிகள் பேரவை சாஸ்தாஜி,அமலரசு,வேதவியாசர் குருகுல அறக்கட்டளை, திருநெல்வேலி என் டிவி உரிமையாளர் ஆனந்த், தாெழிலதிபர்கள் பேச்சிமுத்து, தமிழ் எனும் ராமராஜன்,சரவணன்,செல்வகுமார்,லேப் டெக்னிசியன் பாலன், ஆத்தூர்மணி குரூப் முதுநிலை மேலாளர் பிரபு, மேலாளர்கள் சரவணன்,மாடசாமி, மனிதவளத்துறை பிரிவு பொன்னுத்தாய்,ஐஸ்வர்யா,முத்துலட்சுமி,தனலட்சுமி,சந்தானலட்சுமி,சகுந்தலா,சங்கரி, முத்துகோமதி, மற்றும் ஊழியர்கள் நாகராஜ், எலக்ட்சிரியன் அலெக்ஸ்,வடிவு உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இந்நிகழ்ச்சியில் மக்கள் டெய்லி செய்தி குழும சிஇஓ சங்கர் கலந்து கொண்டு ஏற்புரையாற்றினார். மக்கள் டெய்லி கலையகம் நிகழ்ச்சி இயக்குனர் பாலு ஜெனிஃபர் மற்றும் சுகுமார் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
கருத்துக்கள்