எச்.ராஜா நடித்துள்ள "கந்தன் மலை" திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது 'கந்தன்மலை' என்ற படத்தில் எச்.ராஜா நடித்துள்ளார். இந்த படத்தை வீர முருகன் என்பவர் இயக்குகிறார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. எச்.ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி நிற்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. கந்தன் மலை' என்பது கடவுள் முருகனின் கோவில் இருக்கும் மலையை குறிக்கும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றத்தை 'கந்தன் மலை' என்று சொல்வார்கள்.
கருத்துக்கள்